அதிர்ச்சி : ஸ்மார்ட்போன் பேட்டரிகள் வெடிக்க மட்டும் செய்யவதில்லை..!

ஸ்மார்ட்போன் பேட்டரிகள் தீப்பிடித்து கருகுவது அல்லது வெடித்து சிதறுவது மட்டுமின்றி வேறொரு ஆபத்தையும் சப்தமின்றி வழங்கி கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

பல சாம்சங் ஸ்மார்ட்போனின் பேட்டரிகள் வெடித்துள்ளன, சமீபத்தில் ஐபோன் பேட்டரி ஒன்றும் வெடித்த செய்தி வெளியானது. ஆனால், உங்களுக்கு தெரியுமா ஸ்மார்ட்போன் பேட்டரிகள் வெடிப்புகளுக்கு மட்டும் உள்ளாகுவதில்லை. பொதுவாக ஸ்மார்ட்போன் பேட்டரிகள் வெடிக்கும் என்பதில் மட்டும் தான் உங்களுக்கு தெளிவு இருக்கிறதென்றால் பேட்டரிகள் பற்றி மேலும் பல தெளிவுகளை நீங்கள் பெற வேண்டியதுள்ளது என்று அர்த்தம். முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆபத்தான வாயு 
 
அதாவது ஸ்மார்ட்போன் பேட்டரிகள் தீப்பிடித்து கருகும் அல்லது வெடித்து சிதறுவது மட்டுமின்றி டஜன் கணக்கான ஆபத்தான வாயுக்களை வெளியிடுகிறது, உடன் பயனர்களுக்கு பல விளைவுகளையும் உண்டாக்குகிறது

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்ளெட் 
 
உலகம் முழுவதிலும் மக்கள் பயன்படுத்தும் பில்லியன் கணக்கான ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்ளெட் போன்ற நுகர்வோர் சாதனங்களால் டஜன் கணக்கான ஆபத்தான வாயுக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அடையாளம் 
 
 விஞ்ஞானிகள் குழுவொன்று கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்ட நச்சு வாயுக்களை லித்தியம் அயன் பேட்டரிகள் வெளியிடுவதை அடையாளம் கண்டுள்ளது.

அதீத எரிச்சல் 
 
பேட்டரிகள் மூலம் வெளியாகும் இந்த நச்சு வாயுக்கள் ஆனது தோல், கண்கள் மற்றும் மூக்கு பாதைகளில் அதீத எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் பரந்த சூழலிற்கு தீங்கு விளைவிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

ஆபத்து 
 
சீனாவின் என்பிசி பாதுகாப்பு மற்றும் சிங்குவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பல மக்கள் கருவிகள் சூடாகுவது அல்லது தங்கள் ரிச்சார்ஜபிள் சாதனங்களுக்கு ஒரு மதிப்பற்ற சார்ஜர் பயன்படுத்துவது சார்ந்த விடயங்களில் ஏற்ப்படும் ஆபத்துக்களை அறியாமல் இருக்கலாம்.
 
கட்டாயத்தில் நாம் 
 
லித்தியம் அயன் பேட்டரிகள் தீவிரமாக உலகம் முழுவதும் பல அரசாங்கங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன மற்றும் லித்தியம் அயன் பேட்டரிகள் மில்லியன் கணக்கான குடும்பங்களில் பயன்படுத்தப்படுகிறது, எனவே இந்த பொது ஆற்றலின் பின்னால் இருக்கும் இடர்களை புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சாத்தியக்கூறுகள் 
 
 குறிப்பாக ஒரு கார் உள்துறை அல்லது ஒரு விமானம் பெட்டி போன்ற ஒரு சிறிய சீல் சூழலின் உள்ளே கசியும் கார்பன் மோனாக்சைடுபோன்ற வாயுவானது ஒரு குறுகிய காலத்திற்குள் தீவிரமான தீங்குகளை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் அதிகம்

Post a Comment

0 Comments