நோக்கியா 6, 5 மற்றும் 3 : தள்ளிப்போன இந்திய வெளியீடு, கூடவே இன்னொரு சிக்கல்.!

இதையே தான் 7 மாசமா சொல்லிட்டு இருக்கீங்க ஆனா நோக்கியா போன் கைக்கு வந்த பாடில்லை என்று வாசகர்களே கடுப்பாகும் அளவு நோக்கியா சார்ந்த தகவல்களை நாங்கள் வெளியிடுகிறோம் என்று கூறுவதை விட, நோக்கியா நிறுவனம் மற்றும் அதன் கருவிகள் சார்ந்து தொடர்ந்து வெளியாகும் தகவல்கள் எங்களையும் சேர்த்தே கடுப்பாக்குகிறது என்று கூறினால் சற்று பொருத்தும். அதற்காக உங்களுக்கு தகவலை வழங்காமல் இருக்க முடியுமா.?? முடியாது அல்லவா.? ஆக, இதோ நோக்கியாவின் இந்திய வெளியீடு சார்ந்து வெளியான புதிய தகவல்கள், உங்களுக்காக.!

ஆன்லைனில் 
 
நோக்கியா 3310 (2017) கருவியானது இந்தியாவில் ரூ.3310/- என்ற விலை நிர்ணயத்தில் மே மாத மத்தியில் ஆன்லைனில் மட்டுமே ஆன்லைனில் கிடைக்கும் வண்ணம் க்ரோமா வழியாக விற்பனையை தொடங்கியது. இதனை தொடர்ந்து நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகளும் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியது.
 
நடுப்பகுதி 
 
நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 உட்பட நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதத்தில் இந்திய நாட்டில் வெளியிடப்படும் என்று சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. ஆனால் சமீபத்திய தகவல் இந்த வெளியீடு ஜூன் மாதம் நடுப்பகுதிக்கு தள்ளிப்போகலாம் என தெரிகிறது.

முதலில் கிடைக்கும் 
 
மேலும், அனைத்து ஸ்மார்ட்போன்களும் ஒரே நேரத்தில் கிடைக்காது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. நோக்கியா 3 ஸ்மார்ட்போன் முதலில் கிடைக்கும் மற்றும் நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 தொடர்ந்து வெளியாகும் வரும் என்று வெளியான அறிக்கை கூறுகிறது.

உறுதி 
 
இதிலிருந்து நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் ஜூன் 15-க்கு வெளியாகலாம். ஆக மொத்தம் ஜூன் முடிவில், மூன்று நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையைத் தாக்கும் என்பது உறுதி.

நோக்கியா 6 அம்சங்கள் 
 
 - ரூ.20,000/- என்ற விலை நிர்ணயம் - 5.5 அங்குல முழு எச்டி 1080பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே - 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி - 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு - 8எம்பி செல்பீ கேமரா - 16எம்பி ரியர் கேமரா - கைரேகை சென்சார் - 4ஜி எல்டிஇ - 3000எம்ஏஎச் பேட்டரி - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்
 
நோக்கியா 5 (அம்சங்கள்) 
 
- ரூ.15,000/- என்ற விலை நிர்ணயம் - 5.2 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி - 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு - 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு - 13எம்பி பின்புற கேமரா - 4ஜி எல்டிஇ - 3000எம்ஏஎச் - ஓடிஜி ஆதரவு
 
நோக்கியா 3 அம்சங்கள் 
 
ரூ.10,000/- என்ற விலை நிர்ணயம் - 5 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே - க்வாட்கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி - 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு - 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு - 8எம்பி ரியர் கிம் - 8எமி செல்பீ கேம் - ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் - ஓ.டி.ஜி. ஆதரவு - 4ஜி எல்டிஇ - 2650எம்ஏஎச் பேட்டரி

Post a Comment

0 Comments